கிராம்பின் மருத்துவ குணங்கள்..!

கிராம்பு அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை மக்களால் பயன்படுத்திவரும் ஒரு முக்கிய மருத்துவ குணமுடய மூலிகையாகும்,இதில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன.

~பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.
~ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிப்பதால், ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
~இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்து, கொழுப்பைக் குறைக்கும்.
~வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் என்பதாலேயே பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது.
~உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை               முறைப்படுத்தவும் உதவும்.

அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் வாசனை பொருட்களில் முக்கியமான ஒன்று கிராம்பு. இது உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமில்லாமல் கிராம்பு டீ குடிக்கும் போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. அதனை குறித்து

கிராம்பில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அல்சர் பாதிப்பிலிருந்து குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும் பயன்படுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த கிராம்பு தேநீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.