பாத்துங்க பன்னி குட்டி பாஞ்சிற போகுது..!! பன்னியுடன் போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி..!

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பல படங்களை நடித்து ஒரு ரசிகர் பட்டளத்தை தன் வசம்வைத்துள்ளார்.2014 மலையாளத்தில் வெளிவந்த 1983 என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிய இவர் இந்த முதல் படத்தின் மூலமே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார்.

மேலும் தமிழ் திரை உலகிற்கு 2014-ஆம் ஆண்டு டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.தமிழில் இந்த படத்தின் மூலமே அதிக தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.அத்தோடு 2015-ஆம் ஆண்டு யாகாவாராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் கயல் கேரக்டரை செய்து அசத்தியிருந்தார்.இதனை அடுத்து தமிழில் வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து கோ 2 படத்தில் அவர் நடித்து அசத்தினார். மரகத நாணயம் திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் படம் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து நடிகர் ஆதியை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளாக பல வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது ஹனிமூனை கொண்டாடி இருக்கிற என்ற விஷயம் இணையங்களில் வைரலாக பரவியது.சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது காலாண்டில் உள்ள கோ சாமூய் எனும் பன்றிகள் வாழக்கூடிய பன்றி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அதிகளவு பன்றிகள் இருக்கும் இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிக்கி கல்ராணி அங்கு இருக்கும் பன்றி குட்டிகளைப் போலவே தனது முகத்தை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பன்றி குட்டியோடு பன்றி குட்டியாய் நிக்கி நிற்பது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளது என்று கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.இதனை அடுத்து இவர் தனது கணவரோடு இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்குகளையும் கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.