மாதுளம் பழத்தில் இவ்வளவு நன்மையும் மருத்துவ குணமும் இருக்கா..!!

ஒழுங்கற்ற மாதவிடாய் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மாதவிடாயின் போது அதிகப்படியான உதிரப்போக்கால் இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. வில்வம், அத்திப்பழம், மாதுளம் பழங்கள் மாதவிடாய் வலிக்கு அருமையான மருந்து.மாதுளம்பழத்தைப் போலவே அதன் தோலும் மிகவும் நன்மை பயக்கும். பெரும்பாலும் இது தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தலாம். மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து சம அளவு பாசிப்பயறு பொடியுடன் கலந்து குளித்து அல்லது உடலில் பூசிவந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.உடலுக்கு குளிர்ச்சி தரும். இந்த பொடியை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம் நீங்கும். பால் மற்றும் ரோஸ் வாட்டருடன் மாதுளை தோலைப் பொடி செய்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு மாதுளை நன்மை பயக்கும். மாதுளை விதைகள் சிறிய மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளன.

அத்தகைய மூலக்கூறு அமைப்பு தோலில் ஊடுருவி ஒட்சிசனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. இந்த பழம் வறண்ட மற்றும் சீரற்ற சருமத்திற்கு அழகு சேர்க்கிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை இழப்பதைத் தடுக்கிறது மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.சருமத்தின் ஆரோக்கியத்தைப் பரமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய விட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.மாதுளம் பழமானது பொட்டாசியம், கல்சியம், விட்டமின் ‘சி’, ஃபோலேட், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்துப் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. எனவே இப்பழம் கருவுற்றப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், உயிரணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மாதுளைப்பழம் பயன்படுகிறது. கர்ப்பகாலத்தின்போது பருகப்படும் மாதுளைச் சாறு தசைப்பிடிப்புகள் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கப் பயன்படுகிறது.மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும். மாதுளம்பழத் தோலைச் சாப்பிட்டால், இதய நோய்கள் வராமல் காக்கும். எலும்பை வலுவாக்கும்.