அதிரடியாக வெளியானது புஷ்பா 2 திரைப்பட டீசர்..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தெலுங்கு திரைப்பட உலகில் அதிக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.இவர் நடிகர் மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், விளம்பர நடிகராகவும், நடன கலைஞராகவும், இயக்குனர் ஆகவும் திகழ்பவர்.இவர் நடிப்பில் வெளி வந்த பல தெலுங்கு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.இந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா 1 தி ரைஸ்.

இப்படத்தில் அல்லு அர்ஜுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.மேலும் சமந்தா இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்கு அவரது நடனம் பெரும் பங்காற்றியது. இதையடுத்து புஷ்பா 2 தி ரூல் என்ற படம் உருவாகியுள்ளது.இப்படம் ஆகஸ்ட் 15ஆம் திக‌தி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கடந்த 5ம் திக‌தி புஷ்பா பட நாயகி ரஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் அவரது கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.