மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த நபர்..!! விஹாரையின் பாதுகாவலர் கைது..தீவிர வேட்டையில் பொலிஸார்..!

விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் கண்டி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் கைகள் மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விகாரையின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவலாளி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.