பாடசாலை செல்லும் மாணவன் விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறி தாக்குதல்..!!மன்னாரில் திடுக்கிடும் சம்பவம்..!

மன்னாரில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரானவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்றுமுன்தினம் சம்பவமானது மன்னார் – கரிசல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.கரிசல் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்தவரைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து கூரிய வாள், மூன்று கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதனையடுத்து 40 வயதுடைய சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில், விஷேட அதிரடிப் படையினர் மீது கூரிய கத்தியால் கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது விசேட அதிர அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.