குழந்தைகளுக்கான த‌டுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.6 முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், எதிர்வரும் […]

வைத்தியர்கள் போல் நடித்து பெண்களை ஏமாற்றிய இரு வெளிநாட்டவர் கைது..!

நைஜீரியப் பிரஜைகள் இருவரை இலங்கை கணினி குற்றப் பிரிவினர் வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுசெய்துள்ளனர்.விசாரணையில், இருவரும் மூன்று பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் அளுத்கமவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நைஜீரிய பிரஜைகள் இருவரும் வைத்தியர்கள் போல் நடித்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தி இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பண மோசடி […]

மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை..!

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், விரிவுரைகள் உள்ளிட்டவற்றிற்கு இன்று முதல் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மாதிரி வினாக்களை விநியோகித்தல் மற்றும் மாதிரி வினாக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுக்களுக்கு […]

மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்..!

மின்கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேர்பெறுமதி (வற் )வரி மின்கட்டணத்துக்கு தாக்கம் செலுத்தாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பிரனாந்து தெரிவித்தார்.மின்கட்டண திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,மின்கட்டண திருத்தம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நீர்மின்னுற்பத்தி,நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி மற்றும் அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம்.எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சகல […]

அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து எரிபொருள் விலையில் மாற்றம்..!

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படவுள்ளதால் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதம் முதல் வரி(வாட்) 18 சதவீதம் அதிகரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி எரிபொருளுக்கான வரி 18 வீதத்திலிருந்து 7.5 சதவீதம் நீக்கப்பட்டு 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளது. மேலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான VAT விகிதம் 15.5% விதிக்கப்படவுள்ளது.இதன்படி, ஜனவரி 1ஆம் […]

இலங்கையில் பல நாட்கள் கழித்து ஒரு உயிரை எடுத்த கொரோனா(கோவிட்)..!

நாடு கொரோனா(கோவிட்) தொற்றில் இருந்து தப்பி ஒருவருடம் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் நாட்டில் ஒரு கோவிட் மரணம் பதிவாகியுள்ளது.65 வயதுடைய கம்பளை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொவிட் அறிகுறிகளுக்கு இணையான அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நுரையீலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ்..!

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் […]

இராணுவ சிப்பாயின் கேவலச்செயல்..!பாதிப்பிற்குள்ளான 13வயது சிறுமி..

மாணவி ஒருவரை காதலித்து துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய் ஒருவர் நவகத்தேகமவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,குறித்த சம்பவம் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.கைதுசெய்யப்பட்டவர் குருவிட்ட இராணுவ முகாமில் கடமையாற்றும் 19 வயதுடைய இராணுவ சிப்பாயாவார். இவர் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்துள்ளனர்.சந்திக்க வருமாறு மாணவியை அழைத்த குறித்து இராணுவ சிப்பாய் ஆள் நடமாட்டமில்லாத வீட்டிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவி இந்த சம்பவத்தை […]

வியாபார‌ நோக்கத்தோடு பழுதடைந்த உணவை விற்ற பிரபல தனியார் உணவகம்..!

இராஜகிரியவில் உள்ள கேஎப்சி கடையொன்றில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சுகாதார பரிசோதகர்களால் அங்கு இருந்த‌ கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், தாங்கள் உட்கொண்ட கேஎப்சி சிக்கனில் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து புகார் வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.அதேவேளை , மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக […]

ஆபாசப் படங்களை பார்க்கும், பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் உதவி ; ஒருவர் கைது

12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல்துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவரின் உறவு முறை சிறுமியே இந்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.குறித்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து […]