பாலூட்டும் பால் போத்தலில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பொருள்..!! அதிர்ச்சியில் பொலிஸார்கள்..!

இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ரவைகளை குழந்தைகளுக்கு பாலூட்டும் பால் போத்தலில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இச் சம்பவமானது வெலிப்பன்ன, நாவுட்டுடுவ பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இடம் பெற்றுள்ளது.

வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் மாகாண புலனாய்வு அதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலாத் துறை வர்த்தகத்தில் பணியாற்றும் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள், ரவைகள் , என்பன கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரனைகள் இடம்பெற்று வருகின்றது.