சகோதரனுடன் சேர்ந்து கணவனை விசம் வைத்து கொன்ற மனைவி..!! திடுக்கிடவைக்கும் சம்பவம்..!

மனைவி ஒருவர் தனது கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது அம்பாந்தோட்டை – பெலியத்த கொஸ்கஹகொட பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.கடந்த 20ஆம் திகதி குறித்த கொலைச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக மனைவி பெலியத்த பொலிஸாலிடம் தெரிவித்துள்ளார்.சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *