கணவனை ஆயுதத்தால் கொன்ற மனைவி..!! அதிர்ச்சி சம்பவம்..!

கூரிய ஆயுதத்தால் தன்னுடைய‌ கணவனையே பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று கரந்தெனிய – குருபேபில பகுதியில் நடைபெற்றுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (03/03/2024)அதிகாலை இடம் பெற்றுள்ளது.இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் கொலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கரந்தெனிய பொலிஸார் கொலையை செய்த பெண்ணை கைது செய்துள்ளனர்.இருவருக்குமிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கரந்தெனிய பொலிஸில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.