போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள்..!!

களுத்துறை பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றன.குறித்த பாடசாலைகளை களுத்துறை களுத்துறை புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான‌ பாடசாலைகளும் அடங்கும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் நற்பெயருக்குக் தீங்கு ஏற்படுத்துவதாக […]

யாழில் 30அடி தூரம் வரைக்கும் பட்டத்துடன் பறந்த இளைஞன்.!!

தற்போது சமூக வலைதளங்களில் ப‌ட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற யாழ்ப்பாண வாலிபர் ஒருவரின் காணொளி வைரலாக பரவி வருகிறது.யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரே இவ்வாறு ப‌ட்டத்தின் கயிற்றில் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தின் கயிற்றில் ஏறியே குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்துள்ளார். பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் […]

குழந்தைகளை கொண்டுள்ள குடும்பங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!

குழந்தைகளிடையே தொழுநோய் பரவுவதைத் தடுக்க, குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டொக்டர் பிரசாத் ரணவீர குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே தொழுநோயை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் […]

இலங்கை மின்சாரசபை மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!!

இலங்கை மின்சாரசபை நாட்டில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மற்றும் மின் இணைப்புகள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி 1987 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை மக்களைக் கோரியுள்ளது.அறிக்கையொன்றினை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்வேலிகள் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.பல்வேறு மனித நடவடிக்கைகளினால் 2023 […]

2024ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை கல்வி குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு.!!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி 2024ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 2023ஆம் கல்வியாண்டுக்கான 3 ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெறும் அரைகுறை ஆடை..அதுல ஆயிரத்தெட்டு ஓட்டை வேற..! கிளாமர் உடையில் கேப்ரியல்லா..!!

விஜய் டிவி டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டு சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவராக‌ மாறியவர் கேப்ரியல்லா.நடன நிகழ்ச்சி, பிக்பாஸ் என கலந்துகொண்ட இவர் 7சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய கேப்ரியல்லா, தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த 3 படத்திலும் நடித்திருதார். இப்போது ஹீரோயினாகி பல ரசிகர்களை வென்றுள்ளார். சினிமாவுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பணிந்து கொண்டிருந்தவர் சினிமாவிற்கு பின்பும் போதிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் […]