தலைமுடி ஆரோக்கியமாக வளர இந்த நான்கு முறையை பின்பற்றினால் போதும்..!

பெண்களின் அழகில் தலைமுடி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.எல்லா பெண்களும் நீண்ட கூந்தலை விரும்புவார்கள். இவ்வளவு நீளமான கூந்தலை நீங்கள் விரும்பினால், நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள‌ வேண்டும்.அந்த வகையில் உச்சந்தலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மயிர்க்கால்கள் உள்ளன. இவை ஒவ்வொரு மாதமும் அரை அங்குலமாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.இருப்பினும் பலருக்கு இந்த மயிர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் முடி மெலிதல், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே முடி வேர்களை வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

குளிர்ச்சியான நீர்

எப்போதும் வெந்நீர் முடியை உடைத்து வேர்களை சேதப்படுத்தும். எனவே, எப்போதும் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள்.

சரியான அளவு ஷெம்பூ

ந்த ஷெம்பூவாக இருந்தாலும் உச்சந்தலையில் அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றி உலர்த்துகிறது.

சுத்தம் அவசியம்

நாம் தலைக்கு பயன்படுத்தும் சீப்புகள், தூரிகைகள் போன்றவற்றில் இருக்கும் அழுக்குகளும் உச்சந்தலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இவற்றை எப்பொழுதும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மசாஜ்

தினமும் காலை அல்லது படுக்கைக்கு முன் 3 நிமிடங்கள் முடியை மசாஜ் செய்யவும். இது முடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.