துளசி இலையின் மகத்துவம்..!! நோய்களை நீக்கும் மருத்துவ குணம்..!

துளசி மரத்தை மக்கள் பலர் இறைபக்திக்காகவும், வீட்டில் இருந்தால் நன்மை கிடைக்கு என்ற நோக்கில் வளர்த்து வருகின்றனர்.துளசி இலையில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலர் அறியாமலேயெ இருக்கின்றனர்.துளசி இலையில் உள்ள பல்வேறு நோய்கள் குணமாகும் சக்தி வாய்ந்த மருத்துவ குணம், பயன்கள் பற்றி பார்க்கலாம்.துளசி இலையை தினமும் மென்று தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் பல நோய்கள் விலகும் என்கிறது சித்த மருத்துவம்.

துளசியில் சளியில் இருந்து நிவாரணமும் உள்ளது. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன் உடலில் உள்ள சூட்டைத் தணிக்கும் குணம் கொண்டது. துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.துளசி இருமல், சளி போன்றவற்றுக்கு இலவச மருந்தாகும்.இதில் இருமலை எதிர்த்துப் போராடும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் காணப்படுகின்றது.

இன்றைக்கு முக்கிய நோய்களாக மூன்றை சொல்லலாம். ‘நீரிழிவு’ என்ற சர்க்கரை நோய், ‘ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன், ‘பிளட் பிரசர்’ என்ற ரத்த அழுத்தம். இவை மூன்றில் ஒன்று நம்மில் பலருக்கும் இருக்கிறது. தினமும் சில துளசி இலைகளை மென்று தின்றாலே சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, சிறிது தேன் கலந்து உணவுக்கு பின்பு உட்கொண்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும். துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த சாற்றில் 50 மில்லி எடுத்து, 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.துளசி இலைகளை எலுமிச்சை சாறுடன் அரைத்து தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.

இதனால் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.அத்துடன் என்றும் இளமையுடன் திகழ உதவுகிறது துளசி நீர். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. அத்துடன் தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *