பொலிஸாருக்கு பயம் காட்டிய இளைஞன்..!! பொலிஸாரால் மடக்கிபிடிப்பு..!

இளைஞர் ஒருவர் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலியான துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு – டார்லி வீதியில் நேற்றய தினம் (01.04.2024) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழக்கமான பணி நிமித்தம் டார்லி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​காரில் வந்த இளைஞர் ஒருவர் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் சாரதியாக பணிபுரியும் 22 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.