அடர்த்தியான கூந்தல் வேண்டுமா..? இந்த 4 உணவு போது..!!

தற்காலங்களில் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்து கின்றது.பலருக்கு முடி உதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி மெலிவு ஏற்படுகிறது.எனவே அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் இந்த 4 உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் மிகவும் முக்கிய பயனுள்ளதாக இருக்கும். இது முன்கூட்டிய முடி உதிர்தல் மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது.வயதான எதிர்ப்பு மற்றும் எடை இழப்புக்கும் நெல்லிக்காய் நன்மை பயக்கின்றன.நெல்லிக்காய் சாறு தினமும் குடித்தால் முடிக்கு நல்லது. மேலும், ஸ்மூத்தி அல்லது சட்னியில் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடலாம்.

முருங்கை கீரை ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி அதன் மூலம் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கிறது மற்றும் மயிர்க்கால்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.முருங்கை கீரை பொடியை பருப்பு அல்லது காய்கறிகளில் சேர்த்து சாப்பிடலாம். மேலும், வெதுவெதுப்பான நீரில் கலந்து கூடிக்கலாம்.

வெந்தய விதையும் முடி உதிர்வை குறைக்கிறது. இந்த உணவை பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.இவை இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ஹார்மோன் சமநிலையின்மையால் முடி உதிர்வைக் குறைக்கிறது.

ஜாதிக்காய் முடி உதிர்வையும் , முடி சேதத்தை குறைக்கிறது. முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற பயனுள்ளதாக இருக்கும்.இரவு உணவிற்குப் பிறகு பாலில் ஊறவைத்த ஆலிவ் விதைகளுடன் 1 சிட்டிகை ஜாதிக்காயை சேர்த்து தினமும் குடித்தால் முடி ஆரோக்கியத்திற்கு உதவும்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *