நாவல் பழத்தின் மருத்துவ குணமும் நன்மைகளும்..!!

எங்கள் உடலில் உள்ள நோய்கள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கு இயற்கையே பல வழிமுறைகளை தந்துள்ளது.அவ்வாறு பல வகையான பழங்கள் நோய்களை தீர்க்கு சிறந்த ஆற்றல் படைத்ததாக காணப்படுகிறது.அந்த வகையில் நாவல் பழம் முக்கிய பங்கு செலுத்துகிறது.நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவல் பழத்தில் மட்டுமல்லாமல் மரத்தின் இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.

சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது.நீரிழிவு நோயைத் தடுக்கும் பழம் நாவல் பழம் இதை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இது கல்லீரல் நோய்கள் மற்றும் குடல் புண்களை குணப்படுத்த வல்லது.நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.நாவல் பழச்சாறுகளை ஒரு நாளைக்கு மூன்று முறை தவறாமல் உட்கொள்வதன் மூலம், நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவை 15 நாட்களுக்குள் பத்து சதவீதம் குறைக்கலாம். மூன்று மாதங்களுக்குள் முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.